கருச்சிதைவு பற்றிய தகவல்
ஆங்கிலத்தை முதல் மொழியாகக் கொண்டிராத பெண்களுக்காக நாங்கள் கருச்சிதைவு பற்றிய தகவலை வழங்கியுள்ளோம். ஐக்கிய இராச்சியத்தின் குடியிருப்பாளர்களான மற்றும் ஐக்கிய இராச்சியத்தைச் சாராத குடியிருப்பாளர்களான பல பெண்களை நாங்கள் எங்களின் மையங்கள் மூலமாகக் காண்கின்றோம். எங்களின் குழுவினர் அவர்களால் முடிந்தளவுக்கு ஆதரவும் உதவியும் அளிப்பதற்கு அங்கே இருக்கிறார்கள்.
மேரி ஸ்டோப்ஸ் கிளினிக்ஸ் (மேறி ஸ்டோப்ஸ் மருத்துவ மனைகள்) பற்றியது
மேரி ஸ்டோப்ஸ் இண்டர்நாசனல் என்பது ஜக்கிய இராச்சியம் (யுகே) பூராவும் 9 மருத்துவ மனைகளை வைத்திருக்கின்றது. இந்த மருத்துவ மனைகள் கருச்சிதைவு பற்றிச் சிந்திக்கும் பெண்களுக்கு உதவி வழங்குகின்றன. நாங்கள் மிகவும் அனுபவம் உள்ளவர்கள். மற்றும் எங்களின் வைத்தியர்களும் தாதிமார்களும் வல்லுநர்கள். ஒவ்வொரு வருடமும் யுகேயிலுள்ள கருச்சிதைவுச் சேவைகள் அனைத்தினதும் மூன்றிலொரு பகுதியை நாங்கள் வழங்குகின்றோம். உங்களைப் பராமரிப்பதற்கும் எங்களின் மருத்துவ மனைக்கு நீங்கள் வருவதைச் சௌகரியமாக இருக்கச் செய்வதற்கும் நாங்கள் எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம்.
நீங்கள் கருத்தரித்துள்ளீர்கள் என நினைத்தால் உதவியைப் பெற்றுக்கொள்ளுதல்
கருச்சிதைவு
நீங்கள் கருத்தரித்துள்ளீர்கள் என அறிந்து கருச்சிதைவு செய்வது பற்றிச் சிந்தித்தால், மேரி ஸ்டோப்ஸ் மையங்களில் நாங்கள் வழங்கும் சேவை பற்றிய சில தகவல் இங்கே உள்ளது. நாங்கள் உங்களுக்கு உதவுவதற்கு அங்கே இருக்கிறோம். அனைத்தும் முற்றிலும் அந்தரங்கமாக உள்ளன.
கருத்தரிப்புச் சோதனை
நீங்கள் கருத்தரித்துள்ளீர்கள் என உறுதிப்படுத்துவதற்கு ஒரு கருத்தரிப்புச் சோதனையைச் செய்யவும். மருந்து விற்பனையாளர் (கெமிஸ்ட்) ஒருவரிடமிருந்து அல்லது சுப்பர்மார்க்கெட் ஒன்றிடமிருந்து நீங்கள் ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியும் அல்லது உள்ளூரிலுள்ள குடும்பத் திட்டமிடல் மருத்துவ மனை ஒன்றில் ஒரு சோதனையைச் செய்துகொள்ளவும்.
உங்களின் நியமனத்தைச் செய்தல்
கருச்சிதைவு பற்றிக் கலந்துரையாடுவதற்காக, மேரி ஸ்டோப்ஸ் இண்டர்நாசனல் என்பதுடன் ஒரு நியமனத்தைச் செய்துகொள்ள நீங்கள் விரும்பினால் +44 (0) 845 300 8090இல் எங்களைத் தொடர்புகொள்ளவும். எங்களின் தகவற் சேவை ஒரு வாரத்தில் ஏழு நாட்களும் 24 மணித்தியாலங்கள் திறந்திருக்கும்.
நீங்கள் எங்களைத் தொலைபேசியில் தொடர்புகொள்ளும்போது, மையத்துக்கு நீங்கள் வருவதற்கான ஒரு தேதியையும் நேரத்தையும் நாங்கள் உங்களுக்குத் தருவதோடு நீங்கள் எங்கே செல்லவேண்டும் எனவும் உங்களுக்குச் சொல்லுவோம். உங்களுக்குத் தேவையாக இருந்தால், உங்களின் தொலைபேசி அழைப்புத் தொடர்பாக உங்களுக்கு உதவுவதற்கு ஆங்கிலத்தைப் பேசுகின்ற, மற்றும் நீங்கள் நம்புகின்ற ஒருவரைத் தயவுசெய்து முயற்சித்துப் பெற்றுக்கொள்ளவும். உங்களுக்காக மொழிபெயர்ப்புச் செய்வதற்கு அங்கே ஒருவர் இருப்பார் என எங்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதால் மேரி ஸ்டோப்ஸ் செண்டரில் (மையத்தில்) உங்களின் நியமனத்துக்காக நீங்கள் வரும்போதும் உங்களுக்கு உதவி தேவைப்படலாம்.
நீங்கள் விரும்பினால், வந்து ஒரு கலந்தாலோசிப்பையும் கருச்சிதைவுச் சிகிச்சையையும் பெற்றுக்கொள்வதற்கு ஒரு நாளை அல்லது இரண்டு வேறுபட்ட நாட்களை நீங்கள் தெரிவுசெய்ய முடியும். என்ன செய்வது என உங்களுக்குத் தெரியாவிட்டால், அறிவுரையளிப்புச் சேவையும் இருக்கின்றது. ஒரு மொழிபெயர்ப்பாளருக்கான தேவை இருக்கும் என்பதால் அறிவுரையளிப்புச் சேவையை நீங்கள் விரும்புகிறீர்களா எனத் தயவுசெய்து எங்களுக்கு முதலில் தெரிவிக்கவும்.
நீங்கள் தனிப்பட்ட முறையில் வருவதாக இருந்தால், நீங்கள் செலுத்தவேண்டிய ஒரு பணம் இருக்கும். ஒரு கருச்சிதைவு செய்வதற்கான எங்களின் செலவுகள் பற்றிய கூடுதலான தகவலுக்கு மேரி ஸ்டோப்ஸ் கட்டணங்கள் பகுதியைத் தயவுசெய்து பார்க்கவும். மாறாக நீங்கள் ஐக்கிய இராச்சியத்தில் (யுகேயில்) ஒரு குடியிருப்பாளராக இருந்து என்எச்எஸ் சிகிச்சைக்குத் தகுதியுள்ளவராக இருந்தால், நீங்கள் ஒரு குடும்பத் திட்டமிடல் மருத்துவ மனைக்குச் செல்லலாம் அல்லது உங்களின் குடும்ப வைத்தியரிடம் (ஜீபீ) செல்லலாம். அவர்கள் இலவசமான என்எச்எஸ் கருச்சிதைவுச் சேவைகளுக்கு உங்களைச் சிபாரிசு செய்ய முடியும்.
19-24 வார கருத்தரிப்புள்ளவராக நீங்கள் இருந்தால், ஒரு நாளில் சில மணித்தியாலங்களுக்கு மாத்திரம் நீங்கள் மையத்தில் இருப்பீர்கள். நீங்கள் ஒரு தூர இடத்திலிருந்து பயணம் செய்வதாக இருந்தால் உங்களின் சிகிச்சைக்குப் பின்னர் நீங்கள் வீட்டுக்குப் போக முன்னர் ஒரு ஹோட்டலில் அல்லது பெட் அண்ட் பிறெக்வாஸ்ட் வசிப்பிடத்தில் இரவு தங்கியிருத்தலை நாங்கள் சிபாரிசு செய்வோம். இது பற்றிய எந்த விபரங்களையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமானால் எங்களின் குழு +44 (0) 845 300 80 90 மூலமாக உங்களுக்கு உதவ முடியும்.
நீங்கள் கலந்தாலோசித்தல்
நீங்கள் மேரி ஸ்டோப்ஸ் செண்டருக்கு வரும்போது எல்லாவற்றுக்கும் முதலாக நீங்கள் ஒரு வைத்தியரை அல்லது தாதியைப் பார்ப்பீர்கள். ஒரு கருச்சிதைவு பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாக நீங்கள் ஒரு முடிவை எடுத்துள்ளீர்கள் என உறுதிப்படுத்துவதற்கு அவர்கள் உங்களுடன் உரையாடுவார்கள்.
அவர்கள் உங்களின் மருத்துவ வரலாற்றையும் பொதுவான ஆரோக்கியத்தையும் சரிபார்த்துக்கொள்வார்கள், நீங்கள் எடுக்கும் ஏதாவது மருந்துகள் பற்றிக் கேட்பார்கள், கருத்தடை செய்தல் பற்றி உங்களுடன் கலந்துரையாடுவார்கள். நீங்கள் மையத்தில் இருக்கும்போது சில சோதனைகளைப் பெற்றுக்கொள்வீர்கள் - விரலில் குத்திச் செய்யப்படும் ஒரு இரத்த சோதனை அல்லது இரத்த மாதிரியைப் பார்வையிடல், எத்தனை வாரங்களாக நீங்கள் கருத்தரித்துள்ளீர்கள் எனக் கண்டுகொள்வதற்கான ஆய்வு, மற்றும் இரத்த அழுத்தம் பற்றிய ஒரு சோதனை. அத்துடன் சிகிச்சைக்கு முன்பாக எல்லாப் பெண்களும் சிலமைடிய (Chlamydia) நோய் தொற்றுதல் தொடர்பான ஒரு சோதனையைச் செய்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுரை அளிப்போம். கருச்சிதைவுச் சிகிச்சை தொடர்பாகவுள்ள தேர்வுகள் பற்றி நாங்கள் விளக்குவோம். எங்களின் வைத்தியர் ஒரு உத்தியோகபூர்வமான கருச்சிதைவுப் படிவத்தை நிரப்ப வேண்டும். சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கு நீங்கள் சம்மதம் அளிக்கிறீர்கள் எனக் காட்டுவதற்கு நாங்கள் உங்களின் கையொப்பத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
கருச்சிதைவு தொடர்பான தேர்வுகள்
மேரி ஸ்டோப்ஸ் மையங்கள் இரு வகையான கருச்சிதைவு வழிமுறைகளை அளிக்கின்றன:
மருத்துவ கருச்சிதைவு அல்லது கருச்சிதைவு மாத்திரை (9 வாரங்கள் வரைப்பட்ட கருத்தரிப்புக்கு)
இந்த வகையிலான கருச்சிதைவுக்கு நீங்கள் 9 வாரங்களுக்குக் குறைவான கருத்தரிப்பு உள்ளவராக இருக்க வேண்டும். அது மாத்திரைகள் எடுப்பதை உள்ளடக்குவதோடு 24-48 மணித்தியாலங்கள் இடைவேளை உள்ள முறையில் இரு தடவைகள் நீங்கள் மேரி ஸ்டோப்ஸ் மையத்துக்குச் செல்வதை வேண்டிக்கொள்ளுகின்றது. ஆதலால், இந்தச் சிகிச்சை நடைபெறும்போது 2-3 நாட்களுக்கு நீங்கள் நாட்டில் இருக்க வேண்டியுள்ளது.
இந்த முறையிலான சிகிச்சையை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியாதிருப்பதற்கு மருத்துவ காரணம் இல்லை என நாங்கள் சரிபார்த்துக்கொள்வோம். முதல் வருகையின்போது ஒரு மாத்திரையும் இரண்டாம் தடவை வரும்போது 4 மாத்திரைகளும் உங்களுக்குக் கொடுக்கப்படும். கருத்தரிப்புத் தொடருவதை நிறுத்துவதன் மூலமாக, இந்த மாத்திரைகள் கருச்சிதைவை ஏற்படுத்துவதுடன், அவை கருப்பை கருத்தரிப்பை வெளியேற்றவும் செய்கின்றன. எல்லா மாத்திரைகளையும் நீங்கள் எடுக்க வேண்டும். அதிகளவிலான இரத்தப்போக்கும் வயிற்று வலியும் உங்களுக்கு ஏற்படுவதுடன், குமட்டல் உணர்வு உங்களுக்கு இருக்கலாம். வழமையாக, இறுதி மாத்திரைகள் எடுக்கப்பட்டு 4 மணித்தியாலங்களுக்குள் நீங்கள் கருத்தரிப்பை இழப்பீர்கள். சிலவேளைகளில் அது மாத்திரைகள் எடுக்கப்பட்ட பின்னர் ஒரு நாளாக அல்லது இரண்டு நாளாக இருக்கலாம். ஓரளவு இரத்தப்போக்கு இரண்டு வாரங்கள் வரையிலான காலத்துக்குத் தொடரலாம்.
அறுவை மருத்துவ கருச்சிதைவு (24 வாரங்களைக் கொண்டதான கருத்தரிப்புக்கு)
24 வாரங்கள் வரைப்பட்ட கருத்தரிப்புத் தொடர்பாக அறுவை மருத்துவ கருச்சிதைவை எங்களால் வழங்க முடிகின்றது. இந்தச் சிகிச்சையைப் பொறுத்து, உங்களின் சிகிச்சைக்குப் பின்னர் நீங்கள் நேராக வீட்டுக்குப் போகலாம். அறுவை மருத்துவ கருச்சிதைவு கருப்பையிலிருந்து கருத்தரிப்பை அகற்றுவதற்கு மிருதுவான உறிஞ்சலைப் பயன்படுத்துகின்றது. இது கிட்டத்தட்ட 5-10 நிமிடங்களை எடுக்கின்றது. அதன் பின்னர், நீங்கள் வீட்டுக்குப் போவதற்கு முன்னர் சௌகரியமாகவும் நலமாகவும் இருக்கிறீர்கள் என உறுதிப்படுத்துவதற்கு நீங்கள் மருத்துவ மனையில் சிறிது நேரத்தைக் கழிக்க வேண்டும். பிற்பட்ட நிலையிலான கருச்சிதைவு தொடர்பாக, கூடுதலான நேரத்துக்கு நீங்கள் மையத்தில் இருக்க வேண்டும்.
இந்த முறை தொடர்பாக, மூன்று வேறுபட்ட உணர்வகற்றி (அனெஸ்தெடிக்) மாற்று வழிகளை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்:
- சிகிச்சையின்போது முற்றிலும் விழிப்பாக இருத்தல்
- நினைவுடன் துயிலூட்டுதல் எனப்படும் ஒரு சிறிய ஊசி மருந்துடன், தூக்கமாக அல்லது அரைத்தூக்கமாக ஆனால் விழிப்பாக இருத்தல்
- ஒரு பொதுவான உணர்வகற்றியையும் நாங்கள் கொடுக்கின்றோம். அங்கே நீங்கள் முற்றிலும் தூக்கமாக இருப்பீர்கள் - பிற்பட்ட நிலையிலான கருச்சிதைவு எப்போதும் பொதுவான உணர்வகற்றியுடன் செய்துகொள்ளப்படுகின்றது
கருச்சிதைவு தொடர்பான ஆபத்துக்கள்
கருச்சிதைவு மிகவும் பாதுகாப்பான ஒரு வழிமுறை என்றாலும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய சில ஆபத்துக்கள் உள்ளன. இவற்றில் அடங்குபவை நோய் தொற்றுதல் தொடர்பான சிறிய ஆபத்துக்கள், கருத்தரிப்புத் தொடருதல், கருச்சிதைவு முற்றுப்பெறாமை, மிகவும் அருமையான சந்தர்ப்பங்களில் கருப்பைக்குச் சேதம். நீங்கள் எங்களுடன் கலந்தாலோசிக்கும்போது இவை பற்றி நாங்கள் உங்களுடன் கலந்துரையாடுவோம்.
உங்களின் சிகிச்சை நாளில்
உங்களின் சிகிச்சை நியமனத்துக்கு முன்பாக 6 மணித்தியாலங்களுக்கு நீங்கள் உண்ணவோ, தண்ணீர் உட்பட எதையும் குடிக்கவோ, அல்லது புகைக்கவோ கூடாது.
உங்களின் சிகிச்சை நியமனத்துக்கு உங்களின் பங்காளர் / நண்பர் / உறவினர் உங்களைக் கூட்டிவரலாம். ஆனால் உங்களின் வழிமுறையை நீங்கள் வைத்திருக்கும்போது அவர்கள் அங்கே இருக்க முடியாது. உங்களை வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்காக அவர்கள் திரும்ப வரக்கூடிய ஒரு நேரம் அவர்களுக்குக் கொடுக்கப்படும்.
உங்களின் அறுவை மருத்துவத்துக்குப் பின்னர் நீங்கள் ஓய்வெடுப்பதற்கான நேரம் இருக்கும். விலகிச் செல்வதற்கு நீங்கள் போதுமான அளவில் நலமாக இருக்கிறீர்கள் என நாங்கள் உறுதிப்படுத்துவோம்.
ஒரு கருச்சிதைவுக்குப் பின்னர்
நீங்கள் வீட்டுக்குச் செல்லும்போது
நீங்கள் வீட்டுக்குச் செல்லும்போது உங்களை எவ்வாறு கவனித்துக்கொள்வது என முழுமையான பிற்காப்பு போதனைகளை நாங்கள் தருவோம். 24 மணித்தியாலங்களுக்கான பிற்காப்பு உதவியும் அறிவுரையும் 0845 300 8090இல் கிடைக்கின்றது.
ஆகக் குறைந்தது 24 மணித்தியாலங்களுக்கு நீங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என நாங்கள் அறிவுரை அளிக்கிறோம். அடுத்த நாள் நீங்கள் ஒரு தூறல் குளிப்பை (சவர்) எடுக்கலாம். ஒரு வாரத்துக்கு இருந்து குளிப்பதை அல்லது நீந்துதலைச் செய்யக்கூடாது எனவும் உங்களின் இரத்தப்போக்கு முடிவடையும் வரை நறுமணப் பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது எனவும் நாங்கள் உங்களுக்கு அறிவுரை அளிக்கிறோம். பாரமான வீட்டுவேலையை அல்லது உடல்ரீதியான வேலையை நீங்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது உங்களுக்குச் சுகவீனத்தை உண்டுபண்ணலாம் மற்றும் இரத்தப்போக்கையும் நோவையும் ஏற்படுத்தலாம். உங்களின் வேலை மிகவும் உடல் சார்ந்ததாக இருந்தால், கூடுதலாகச் சில நாட்கள் நீங்கள் வேலைக்குச் செல்லாதிருக்க வேண்டும். கருச்சிதைவுக்குப் பின்னர் சில காலத்துக்கு நீடிக்கும் ஓரளவு இரத்தப்போக்கு எல்லா வாடிக்கையாளர்களுக்கும் இருக்கும்.
ஒரு கருச்சிதைவுக்குப் பின்னர் உங்களுக்குத் தேவைப்படும் எல்லா உதவியையும் அறிவுரையையும் எங்களின் 24 மணித்தியால பிற்காப்புச் சேவை வழங்குகின்றது. அத்துடன், எது பற்றியும் நீங்கள் கவலைப்பட்டால் மருத்துவ மனையில் சிகிச்சைக்குப் பின்னரான சோதனைகளை நாங்கள் வழங்க முடிகின்றது. எங்களின் உதவிச் சேவையை நீங்கள் அழைக்க விரும்பினால், ஆங்கிலம் பேசும் நண்பர் ஒருவர் உங்களுடன் இருக்கிறார் எனத் தயவுசெய்து பார்த்துக்கொள்ளவும்.
நோ அகற்றிகளை (பெயின் கில்லேர்ஸ்) எடுத்தல்
வீட்டில் உங்களிடம் நோ அகற்றிகள் உள்ளன எனத் தயவுசெய்து உறுதிப்படுத்தவும். நாங்கள் பராசிட்டமோலையும் (Paracetamol) இபுபிறொவினையும் (Ibuprofen) சிபார்சு செய்கிறோம் (நீங்கள் அவற்றை எடுக்கலாம் என உங்களுக்குச் சரியாகத் தெரிந்தால் மாத்திரம் இபுபிறொவினை எடுக்கவும்). அஸ்பிறின் உற்பத்திப் பொருட்களை எடுக்க வேண்டாம்.
ஒரு கருச்சிதைவுக்குப் பின்னர் உங்களைக் கவனித்துக்கொள்ளுதல்
ஒரு மருத்துவ வழியிலான அல்லது அறுவை மருத்துவ முறையிலான கருச்சிதைவைப் பெற்றுக்கொண்ட பின்னர் உங்களின் உடல் நலத்துக்கு அல்லது வருங்காலக் கருத்தரிப்புக்கு ஏற்படும் ஆபத்து மிகவும் குறைவானதாகும். ஆனால் நோய் தொற்றும் ஆபத்தைக் குறைத்துக்கொள்வதற்கு உங்களின் அடுத்த மாத விலக்கு வரும்வரை பாட்ஸ் (திண்டுகள்- Pads) என்பதை மாத்திரம் பாவிக்கவும். டம்போண்ஸ் (பஞ்சடைப்புகள் - tampons) என்பதைப் பாவிக்க வேண்டாம். இரண்டு வாரங்களுக்கு உடலுறவு வைத்திருக்க வேண்டாம்.
சிகிச்சை நேரத்தின்போது கருத்தரிப்பு தவற விடப்படுவதற்கான அல்லது அது முற்றுப்பெறாமல் இருப்பதற்கான ஒரு சிறிய ஆபத்து உள்ளது. உயர்வான உடல் வெப்பநிலை மற்றும் சளிக் காய்ச்சலை (வுளூ) ஒத்ததான நோய்க் குறிகள் உள்ள பொதுவான உணர்வு போன்றவை உட்பட நோய் தொற்றும் அறிகுறிகளை நீங்கள் பெற்றுக்கொண்டால், தயவுசெய்து எங்களைக் கூடிய விரைவில் தொடர்புகொள்ளவும்.
அறிவுரைக்காக 0044 (0) 845 300 8090இல் நாங்கள் 24 மணித்தியாலங்கள் திறந்திருப்போம். நீங்கள் தொலைபேசியில் தொடர்புகொள்ளும்போது, உங்களின் நான்கு எண்களுள்ள பின் இலக்கத்தை (pin number) தயாராக வைத்திருக்கவும்.
உங்களின் அடுத்த மாத விலக்கு
4லிருந்து 8 வரையான வாரங்களில் எந்த நேரத்திலும் உங்களின் அடுத்த மாத விலக்குக் காலம் ஆரம்பிக்கலாம். அனைத்தும் வெற்றியடைந்துள்ளது எனச் சரிபார்த்துக்கொள்வதற்கு உங்களின் சிகிச்சை நடைபெற்று மூன்று வாரங்களுக்குப் பின்னர் நீங்கள் ஒரு கருத்தரிப்புச் சோதனையைச் செய்துகொள்ள வேண்டும். உங்களின் உடலமைப்பில் கருத்தரிப்பு வளர் ஊக்கி (ஹோர்மோன்) இன்னும் இருக்கலாம் என்பதாலும் விளைவு இன்னும் கருத்தரிப்புள்ளதாக இருக்கலாம் என்பதாலும், அதற்கு முன்பாகக் கருத்தரிப்புச் சோதனையைச் செய்ய வேண்டாம்.
உங்களிடம் ஏதாவது கேள்விகள் இருந்தால் அல்லது ஒரு நியமனத்தைச் செய்ய விரும்பினால் எங்களை +44 (0) 845 300 80 90இல் தொடர்புகொள்ளவும்.